பொது செய்தி

தமிழ்நாடு

மீன்பிடிக்க அனுமதி கோரி மனு

Added : நவ 13, 2020
Share
Advertisement
கடலுார்; தாழங்குடா மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி கோரி ஆர்.டி.ஓ., விடம் மனு அளித்தனர். கடலுார் அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் மாசிலாமணியின் சகோதரர் மதிவாணன், 36; கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதனால், ஏற்பட்ட கலவரத்தில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான படகுகள், வலை, குடோன், வாகனங்கள் சேதமடைந்தன.இது தொடர்பாக தேவனாம்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிந்து,

கடலுார்; தாழங்குடா மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி கோரி ஆர்.டி.ஓ., விடம் மனு அளித்தனர். கடலுார் அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் மாசிலாமணியின் சகோதரர் மதிவாணன், 36; கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதனால், ஏற்பட்ட கலவரத்தில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான படகுகள், வலை, குடோன், வாகனங்கள் சேதமடைந்தன.இது தொடர்பாக தேவனாம்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிந்து, இருதரப்பையும் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் தாழங்குடா மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இப்பிரச்னை தொடர்பாக கடலுாரில் ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. டி.எஸ்.பி., சாந்தி, இன்ஸ்பெக்டர் உதயக்குமார் மற்றும் தாழங்குடா கிராம மக்கள் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், சட்டம் உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மோதலில் ஈடுபட்டது 100 பேர் மட்டுமே. மீதமுள்ள 900 பேர் பாதித்துள்ளனர். மோதலில் சம்மந்தப்படாதவர்களின் படகு மற்றும் வலைகளை ஒப்படைத்து, மீன்பிடி தொழிலில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, கூட்டம் நிறைவு பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X