பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 9:30 மணியளவில் உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE