பொது செய்தி

இந்தியா

பயணம் துவக்கியது அதிநவீன 'வாகிர்' நீர்மூழ்கி கப்பல்

Updated : நவ 13, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
மும்பை: நம் கடற்படையின், அதிநவீன, 'வாகிர்' நீர்மூழ்கி கப்பல், மஹாராஷ்டிராவின், தெற்கு மும்பையில் இருந்து நேற்று(நவ.,12) பயணத்தை துவங்கியது.நம் கடற்படையின், 'ப்ராஜெக்ட் - 75' என்ற திட்டத்தின் கீழ், ஐரோப்பிய நாடான, பிரான்சைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்த, கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல்களை, கடற்படை தயாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஐந்தாவது, 'ஸ்கார்பீன் பிரிவு' கப்பலான,
Indian Navy, Submarine, INS Vagir, Launched

மும்பை: நம் கடற்படையின், அதிநவீன, 'வாகிர்' நீர்மூழ்கி கப்பல், மஹாராஷ்டிராவின், தெற்கு மும்பையில் இருந்து நேற்று(நவ.,12) பயணத்தை துவங்கியது.

நம் கடற்படையின், 'ப்ராஜெக்ட் - 75' என்ற திட்டத்தின் கீழ், ஐரோப்பிய நாடான, பிரான்சைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்த, கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல்களை, கடற்படை தயாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஐந்தாவது, 'ஸ்கார்பீன் பிரிவு' கப்பலான, 'வாகிர்' என்ற அதிநவீன நீர்மூழ்கி கப்பலின் துவக்க விழா, நடந்தது.


latest tamil news



'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த துவக்க விழாவுக்கு, ராணுவ இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தலைமை வகித்தார். அமைச்சரின் மனைவி விஜயா, நீர்மூழ்கி கப்பலை துவக்கி வைத்தார்.மஹாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் உள்ள, மாஸாகான் கப்பல் தளத்தில் இருந்து, 'வாகிர்' புறப்பட்டது.


latest tamil news


இந்த நீர்மூழ்கி கப்பல், மேம்பட்ட ஒலி உறிஞ்சும்நுட்பங்கள், குறைந்த கதிர்வீச்சு இரைச்சல் மற்றும் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப் பட்டுஉள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகளில், வேட்டையாடும் திறன் உடைய, ஆழ் கடலில் மட்டுமே காணப்படும், வாகிர் என்ற மீனின் பெயர், இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar Anand - Chennai,இந்தியா
13-நவ-202019:47:43 IST Report Abuse
Sundar Anand ஜெய் ஹிந் வந்தே மாதரம்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-நவ-202017:07:09 IST Report Abuse
r.sundaram இந்த வாகிர், சுறாவாக செயல்பட வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
13-நவ-202014:00:40 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை இஸ்லாத்தின் மகோன்னதமான பெயர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X