விதை விற்பனை நிலையங்களில் அதிகாரி ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதை விற்பனை நிலையங்களில் அதிகாரி ஆய்வு

Added : நவ 13, 2020
Share
கடலுார்: குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளுக்கு நடப்பு பட்டத்தில், தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய, கடலுார் - விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் மல்லிகா, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலுார் பகுதிகளில் தனியார் மற்றும் அரசு விதை விற்பனை

கடலுார்: குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளுக்கு நடப்பு பட்டத்தில், தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய, கடலுார் - விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் மல்லிகா, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலுார் பகுதிகளில் தனியார் மற்றும் அரசு விதை விற்பனை நிலையங்களில், ஆய்வு செய்தார்.அங்கு இருப்பு வைத்திருந்த நெல் ரகங்களான கோ- 51, எ.டி.டீ-37 மற்றும் உளுந்து ரகங்களான வம்பன் -4, வம்பன் -5, வம்பன் -8 போன்ற விதை குவியல்களின் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர், நிலத்தின் தன்மைக்கு ஏற்ற நடப்பு பட்டத்திற்கு பரிந்துரைத்த பயிர் ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்ய வேண்டும். உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும்.நீண்ட நாட்கள் காலாவதியுள்ள விதைகளை வாங்க வேண்டும். விதை வாங்கும்போது தவறாமல் விலைப் பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். விலைப் பட்டியல் மற்றும் விதை மூட்டைகளில் பொருத்திய விபர அட்டைகளை பயிர் அறுவடை முடியும் வரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என விவசாயிகளை கேட்டுக் கொண்டார். விதை சட்டத்தை பின்பற்றி விதை விற்பனை மேற்கொள்ளாத விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஆறு விதை மாதிரிகள் எடுத்து கடலுார் விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடலுார் விதை ஆய்வாளர் தமிழ்வேல் உடனிருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X