கள்ளக்குறிச்சி; கல்வராயன்மலை, வேங்கோடு கிராம மகளிர் சுய உதவிக் குழுவினர், வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:கல்வராயன்மலையில் உள்ள வேங்கோடு கிராமத்தில் பட்டு ரோஜா, சாமந்தி, செந்தாமரை, ரோஜாப்பூ, இன்பரசி ஆகிய 5 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதில் 71 மகளிர்உள்ளனர்.வெள்ளிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கி வரவு செலவு கணக்குகளை செய்து வருகிறோம். தற்போது கொரோனா தொற்று காரணமாக வெளியூருக்கு கூலி வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.வாழ்வாதாரத்தை மேம்படுத்த கறவை மாடுகள் வாங்க வெள்ளிமலை இந்தியன் வங்கி மூலம் நேரடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE