பொது செய்தி

தமிழ்நாடு

மின் விபத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக இருங்கள் 

Added : நவ 13, 2020
Share
Advertisement
மதுரை : மழை காலங்களில் ஏற்படும் மின் விபத்து தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து மின்வாரியம் தெரிவித்துள்ளது.மழை காலங்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பி அருகில் செல்வதை தவிர்த்து அருகில் உள்ள மின் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இடி, மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, அலைபேசி பயன்படுத்தக்கூடாது.30 எம்.ஏ., இ.எல்.சி.பி., அல்லது

மதுரை : மழை காலங்களில் ஏற்படும் மின் விபத்து தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மழை காலங்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பி அருகில் செல்வதை தவிர்த்து அருகில் உள்ள மின் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இடி, மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, அலைபேசி பயன்படுத்தக்கூடாது.30 எம்.ஏ., இ.எல்.சி.பி., அல்லது ஆர்.சி.சி.பி.,யை அனைத்து மின் இணைப்புகளிலும் பயன்படுத்தவும். மின் கம்பிகளுக்கு அருகே உள்ள மரக் கிளைகளை வெட்டும் போது மின் அலுவலகத்திற்கு தகவல் தரவும்.மின் கம்பம், இழுவை கம்பிகளில் கால்நடை, கயிறு கட்டி துணி காய வைக்க கூடாது.

பிரிட்ஜ், கிரைண்டர் மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய த்ரீ பின் பிளக் பயன்படுத்தவும்.மின் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க வேண்டாம். மின் பாதைகள் அருகில் கேபிள், தொலைபேசி வயர்கள் கொண்டு செல்வது, கனரக வாகனங்களை இயக்குவது கூடாது. மின்தடை, மின் விபத்தை 1912 மற்றும் 94431 11912 வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் பீரிடா பத்மினி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X