தமிழ்நாடு

வருகை : பொன்பத்தி ஏரியில் புதிய வகை பறவைகள்...பட்டாசு வெடித்தால் வெளியேறும் அபாயம்

Added : நவ 13, 2020
Share
Advertisement
செஞ்சி; பொன்பத்தி ஏரியில் கடந்த சில நாட்களாக புதிய வகை பறவைகள் வருகை தருவதால் இதனை பாதுகாக்க தீபாவளியின் போது குறிப்பிட்ட எல்லைக்குள் பட்டாசு வெடிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செஞ்சியில் உள்ள பொன்பத்தி ஏரியில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ஏராளமான பறவைகள் வரத்துவங்கின. இவை நாளுக்கு நாள் அதிகரித்து
 வருகை : பொன்பத்தி ஏரியில் புதிய வகை பறவைகள்...பட்டாசு வெடித்தால் வெளியேறும் அபாயம்

செஞ்சி; பொன்பத்தி ஏரியில் கடந்த சில நாட்களாக புதிய வகை பறவைகள் வருகை தருவதால் இதனை பாதுகாக்க தீபாவளியின் போது குறிப்பிட்ட எல்லைக்குள் பட்டாசு வெடிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செஞ்சியில் உள்ள பொன்பத்தி ஏரியில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ஏராளமான பறவைகள் வரத்துவங்கின. இவை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பறவைகள் வருகின்றன. மாலை 5:00 மணியில் இருந்து வந்து சேரும் பறவைகள் அதிகாலை 6 மணிக்குள்ளாக இரை தேடி பறந்து விடுகின்றன.

நீர்காகங்கள், நீர்க்கோழிகள், கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, காகம், பச்சை கிளிகள், குருவிகள் என உள்ளுர் பறவைகள் அதிகம் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக மேலும் புதிய வகை பறவைகள் காணப்படுகின்றன. வழக்கமாக தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு செப்டம்பர் மாதத்தில் வெளிநாடு, வெளிமாநில பறவைகள் வருவதுண்டு. இதில் கனடா, சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்தும் பறவைகள் வரும்.இவை ஏப்ரல், -மே மாதம் வரை இங்கேயே தங்கி இனப்பெருக்க காலம் முடிந்ததும் திரும்பி செல்லும். செஞ்சியில் காணப்படும் புதிய பறவைகள் எந்த வகை என்பது இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. ஏராளமான பறவைகள் வந்துள்ள போதிலும் அரசு தரப்பில் இதை பாதுகாக்கவும், கணக்கெடுப்பு நடத்தவும், எந்த வகை பறவை என கண்டறிய ஆய்வும் நடத்த வில்லை.ஏரியில் மீன் பிடிக்க பரிசலில் செல்பவர்கள் ஏரியின் மையப்பகுதி வரை சென்று வருகின்றனர். இவர்கள் எழுப்பும் கூச்சலில் பறவைகள் மிரண்டு வெளியேற வாய்ப்புள்ளது. அதே போல் ஏரியில் பறவைகள் உட்காரும் மரங்களை அந்த பகுதியில் குடியிருப்பவர்கள் தொடர்ந்து விறகுக்காக வெட்டி எடுத்து செல்கின்றனர். இதை யாரும் தடுப்பதில்லை.

ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பறவைகள் இருக்கும் இடம் வரை சென்று ஏரியில் தழைகளை வெட்டி ஆடுகளுக்கு போடுகின்றனர். இயற்கை கொடுத்த கொடையாக பறவைகள் தானே வந்துள்ளன. இவைகள் தாங்கள் விரும்பும் இயற்கை சூழல் இருந்தால் மட்டுமே இங்கே நீடித்து இருக்கும், வெளியே சென்றாலும் மீண்டும் வரும்.செஞ்சியில் பறவைகளை பற்றி எந்த புரிதலும் இல்லாதவர்களின் தவறான நடவடிக்கையால் பறவைகள் வெளியேறும் நிலை உருவாகி வருகிறது. தீபாவளியின் போது பட்டாசு வெடித்தால் புதிய வகை பறவைகள் வெளியேறலாம், இதை கருத்தில் கொண்டு இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.என்றாலும் முறையான அறிவிப்பு இல்லை எனில் ஏரி பகுதி வீடுகளில் பட்டாசு வெடிப்பதை தடுக்க முடியாது. இதனால் பறவைகள் வெளியேறும் அபாயம் உள்ளது.எனவே ஏரிக்கு அருகில் உள்ள பகுதிகளை வரையறை செய்து அங்கு மட்டும் பட்டாசு வெடிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என பறவை ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.குப்பை தொட்டி தேவை ஏரி பகுதியில் தினமும் மாலை வேளையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பறவைகளை காண வருகின்றனர்.

டீ, காபி மற்றும் தின்பண்ட கடைகள் வந்து விட்டன. இதனால் ஏற்படும் குப்பைகளால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவும், இது குறித்து விழிப்புணர்வு பேனர் வைக்கவும், குப்பைகளை போட தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X