திண்டிவனம்; திண்டிவனம் பூ மார்க்கெட்டில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களில் விலை இரு மடங்குகளாக உயர்ந்தது.திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உதயம் நகர் அருகே புதியதாக பூ மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து அதிக அளவில் அனைத்து வகை பூக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பூக்கள் வருகிறது. இங்கிருந்து புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.இன்று 13ம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் நாளை 14ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று திண்டிவனம் பூ மார்க்கெட்டில், பூக்களின் விலை உயர்ந்திருந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.350க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை நேற்று 700 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லி, ரூ. 800க்கும் விற்பனை செய்யப்பட்டது.அதே போல், ரூ.150க்கு விற்கப்பட்ட சாமந்தி ரூ. 250க்கும், ரூ. 100க்கு விற்கப்பட்ட அலரி ரூ. 180க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை ஏற்றமாக இருந்தாலும், பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் கூட்டம் அலைமோதியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE