சங்கராபுரம்; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என எஸ்.பி., தெரிவித்தார்.
சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்றுஎஸ்.பி., ஜியாவுல் ஹக் ஆய்வு செய்தார்.அப்போது, நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களைக் கேட்டறிந்தார். அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டார்.டி.எஸ்.பி. ராஜூ, இன்ஸ்பெக்டர் செந்தில் வினாயகம், சப் இன்ஸ்பெக்டர் திருமால் உடனிருந்தனர்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வராயன்மலையில் ஒரு சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் 30 போலீசார் கொண்ட சிறப்பு படையினர் அப்பகுதிகளில் சோதனை நடத்தி சாராயம் மற்றும் ஊறல்களை அழித்தனர். கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும்.மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் குட்கா வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து வாகன சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.தீபாவளிக்குப் பிறகு எனது தலைமையில் மெகா வாகன சோதனை சங்கராபுரத்தில் நடைபெற உள்ளது.கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வெளியே வரவேண்டும்.கடைகளில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். விபத்தில்லா தீபாவளி கொண்டாட பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு எஸ்.பி., ஜியாவுல் ஹக் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE