சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் மதுபான தொழிற்சாலையில் பணி நீக்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 13, 2020
Share
Advertisement
விழுப்புரம்; தனியார் மதுபான தொழிற்சாலை முன் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள, தனியார் மதுபான தொழிற்சாலையில் 30 ஊழியர்கள், பணி நிரந்தரம், ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 30 ஊழியர்கள் பணி நீக்கம்

விழுப்புரம்; தனியார் மதுபான தொழிற்சாலை முன் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள, தனியார் மதுபான தொழிற்சாலையில் 30 ஊழியர்கள், பணி நிரந்தரம், ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 30 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கலெக்டரிடம் கடந்த வாரம் மனு கொடுத்தனர். ஆனாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஊழியர்கள் நேற்று காலை திடீரென மதுபான தொழிற்சாலை நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.தகவலறிந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், மணிமாறன் மற்றும் போலீசார் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X