பொது செய்தி

இந்தியா

'டுவிட்டர்' நிர்வாகத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

Updated : நவ 13, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: லடாக்கின் லே பகுதியை, ஜம்மு - காஷ்மீருடன் இணைத்து காட்சிப்படுத்திய, 'டுவிட்டர்' நிர்வாகத்திற்கு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, மாநிலத்தை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக
Twitter, Notice, New Ladakh Map Error, டுவிட்டர்

புதுடில்லி: லடாக்கின் லே பகுதியை, ஜம்மு - காஷ்மீருடன் இணைத்து காட்சிப்படுத்திய, 'டுவிட்டர்' நிர்வாகத்திற்கு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, மாநிலத்தை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.அந்த இரண்டு பிராந்தியங்களும், தனித்தனி யூனியன் பிரதேசங்களாகவே கருதப்படுகின்றன.

இந்நிலையில், சமூக வலைதளமான டுவிட்டர், லடாக்கின் லே பகுதியை, ஜம்மு - காஷ்மீருடன் இணைத்து காட்டும் வரைபடத்தை காட்சிபடுத்தியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், டுவிட்டர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.


latest tamil news



அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: லடாக்கை, யூனியன் பிரதேசமாக, இந்திய பார்லிமென்ட் கடந்த ஆண்டு அங்கீகரித்தது. ஆனால், அதன் தலைமையகமான லே பகுதியை, ஜம்மு - காஷ்மீருடன் இணைத்து காட்சிப்படுத்தியது, பார்லிமென்டின் இறையாண்மையை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடும் செயல். இது குறித்து, அடுத்த ஐந்து நாட்களுக்குள், டுவிட்டர் நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கவேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் அந்த நோட்டீசுக்கு, டுவிட்டர் நிர்வாகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
13-நவ-202009:44:44 IST Report Abuse
Allah Daniel விடாதீங்க...சென்னியை பிடிச்சு கேள்வி கேட்டாத்தான், இவனுங்க அடங்குவாநுங்க...
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
13-நவ-202005:29:02 IST Report Abuse
NicoleThomson ட்விய்ட்டர் தளத்தை முதலில் பதினைந்து நாட்களுக்கு பிளாக் பண்ணுங்க , இல்லை வாழ்நாள் தடை பண்ணுங்க , அவர்களால் எந்த பயனும் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X