பொது செய்தி

இந்தியா

முதலாம் உலக போர் நினைவு தினம் அனுசரிப்பு

Added : நவ 13, 2020
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவு இடத்தில் முதலாம் உலக போர் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.கடந்த 1914ம் ஆண்டு துவங்கிய உலகப்போர் 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நாளையொட்டி உலகம் முழுவதும் முதலாம் உலக போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு நினைவு தினம் கடைபிடிக்கப் பட்டது.அந்த வகையில் புதுச்சேரி கடற்கரை சாலையில்

புதுச்சேரி; புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவு இடத்தில் முதலாம் உலக போர் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.கடந்த 1914ம் ஆண்டு துவங்கிய உலகப்போர் 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நாளையொட்டி உலகம் முழுவதும் முதலாம் உலக போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு நினைவு தினம் கடைபிடிக்கப் பட்டது.அந்த வகையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.பிரான்ஸ் துணை துாதர் லீஸ் டல்போட் பரே, கலெக்டர் அருண், ஓய்வு பெற்ற பிரான்ஸ் ராணுவ வீரர்கள், புதுச்சேரி பிரான்ஸ் குடியுரிமை பெற்ற மக்கள் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அப்போது இந்தியா பிரான்ஸ் நாடுகளின் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு, இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. இதை தொடர்ந்து உலக போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X