புதுச்சேரி; அரியாங்குப்பம் மணவெளியில் ஸ்கூட்டர்கள் திருடிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் மணவெளி சுப்பையா நகரில் சாந்தி,31; என்பவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த ஜூபிடர் ஸ்கூட்டர் கடந்த 8ம் தேதியும், 7ம் தேதி வெங்கடேசன் என்பவரது பேசினோ ஸ்கூட்டரும் திருடு போனது. புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.நேற்று அதிகாலை இன்ஸ்பெக்டர்கள் தனசெல்வம், புருசோத்தமன், சப் இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் அரியாங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், நைனார் மண்டபம் மூகாம்பிகை நகரை சேர்ந்த புரட்சிபாபு, 32, என்பதும், அவர் ஓட்டி வந்தது மணவெளியில் சாந்தி வீட்டில் திருடியது என்பதும் தெரிய வந்தது.இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மேலும் ஒரு ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான புரட்சிபாபு, நைனார்மண்டபத்தில் மெக்கானிக் கடை வைத்துள்ளார். தன்னிடம் டூவீலர் பழுது பார்க்க வருவோரின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டு, அவர்களது மோட்டார் சைக்கிளை திருடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.புரட்சிபாபுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE