உள் ஒதுக்கீடு விவகாரம் 'மாஜி' எம்.பி., வலியுறுத்தல்

Added : நவ 13, 2020
Share
Advertisement
புதுச்சேரி; 'மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மக்களுக்கு கவர்னர் விளக்கம் அளிக்க வேண்டும்' என மாஜி எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:மருத்துவக் கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக் கீடு செய்யும் அமைச்சரவையின் முடிவை எந்தகாரணமும் கூறாமல், கவர்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு

புதுச்சேரி; 'மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மக்களுக்கு கவர்னர் விளக்கம் அளிக்க வேண்டும்' என மாஜி எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:மருத்துவக் கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக் கீடு செய்யும் அமைச்சரவையின் முடிவை எந்தகாரணமும் கூறாமல், கவர்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியது துரதிருஷ்ட வசமானது.இந்த ஒதுக்கீடு யாரையும் பெரிதும் பாதிக்காது. ஒரு சிலரை மேம்படுத்த உதவும். இதனால் உச்சபட்ச சமூக நன்மை ஏற்படும். இதை உருவாக்குவதுதான் அரசின் கொள்கையாக இருந்து, சமூக வளர்ச்சிக்கு பாடுபட வேண்டியது அரசின் கடமையாகிறது.அமைச்சரவையின் முடிவு பற்றி முதல்வரிடம் கவர்னர் விளக்கம் கோரி இருக்கலாம் அல்லது அமைச்சரவைக்கு மாற்று வழியை ஆலோசனையாக கூறியிருக்கலாம். அமைச்சரவையின் கொள்கை முடிவை நிராகரித்து மத்திய அரசுக்கு இக்கோப்பினை அவர் அனுப்பி இருந்தால் அது மிகவும் நியாயமற்ற செயலாகும். மக்கள் சார்ந்த இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி மக்களுக்கு கவர்னர் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X