பொது செய்தி

இந்தியா

சரிய துவங்கியுள்ள கொரோனா தொற்று பரவல்: சுகாதாரத் துறை நிம்மதி

Added : நவ 13, 2020
Share
Advertisement
புதுச்சேரி; அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கை காரணமாக, மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் சரிந்து வருகின்றது.புதுச்சேரியில் நேற்று 3,545 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-50, காரைக்கால்--6, ஏனாம்--1, மாகி-9 என மொத்தம் 66 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று புதுச்சேரி வெங்கட்டா நகரை சேர்ந்த 58 வயது பெண், காரைக்காலில் 82 வயது மூதாட்டி என இருவர் கொரோனா

புதுச்சேரி; அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கை காரணமாக, மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் சரிந்து வருகின்றது.புதுச்சேரியில் நேற்று 3,545 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-50, காரைக்கால்--6, ஏனாம்--1, மாகி-9 என மொத்தம் 66 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று புதுச்சேரி வெங்கட்டா நகரை சேர்ந்த 58 வயது பெண், காரைக்காலில் 82 வயது மூதாட்டி என இருவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மாநிலத்தில் 607 உயர்ந்துள்ளது.மாநிலத்தில் இதுவரை 36,179 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 726 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 345 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 1071 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,51,706 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 3,09,883, பரிசோதனைகள் 'நெகடிவ்' என முடிவு வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X