புதுச்சேரி; சாலை வரியை ரத்து செய்ததற்காக முதல்வர் நாராயணசாமிக்கு, சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் அனைத்து சங்க நல வாழ்வாதார கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள், பஸ்கள், சரக்கு லாரி உள்ளிட்ட பொது போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.இதனையடுத்து, ஊரடங்கு காலத்திற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் அனைத்து சங்க நல வாழ்வாதார கூட்டமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது.இதன் விளைவாக, 6 மாத காலத்திற்கு சாலை வரியை ரத்து செய்து, 21 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்காக, புதுச்சேரி மாநில சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் அனைத்து சங்க நல வாழ்வாதார கூட்டமைப்பு சார்பில் முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.இதில், ஏ.ஐ.டி.யூ.சி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், சி.ஐ.டி.யூ., பிரதேச செயலாளர் சீனுவாசன், சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஆனந்தன், கோபாலகிருஷ்ணன், சீனு, செல்வகுமார், சார்லஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE