புதுச்சேரி; தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்த்து, விளக்கேற்றி கொண்டாட வேண்டும் என, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் வலியுறுத்தியுள்ளது.
குழும உறுப்பினர் செயலர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கோர்ட் உத்தரவின்படி புதுச்சேரியில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், கல்விக் கூடங்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் சுற்று வட்டாரங்களின் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்கக் கூடாது.பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு மற்றும் நச்சு புகையால், சுவாச நோய்கள் தீவிரமடைதல், கண்கள் மற்றும் காது கேட்கும் திறன் குறைதல், பார்வைக் குறைபாடு, துாக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம், மனநிலை பாதித்தல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.குறிப்பாக, முதியோர், கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.ஆகையால், தீபாவளியை இனிப்பு வழங்கியும் விளக்கு ஏற்றியும் கொண்டாடுவோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE