புதுச்சேரி; கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், வரும் 15ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.
குரு பகவான், வரும் 15ம் தேதி இரவு 9.48 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.இதனையொட்டி, கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழாவிற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15ம் தேதி மாலை 6.15 மணிக்கு கலச பிரதிஷ்டையுடன் குரு பெயர்ச்சி விழா துவங்குகிறது.அன்று இரவு 7.௦௦ மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், 8.45 மணிக்கு குருவிற்கு மகா அபிஷேகம், 9.48 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.குரு பகவானின் பிரதிஷ்டை கலசம் வேண்டும் பக்தர்கள், 15ம் தேதிக்குள் தேவஸ்தான அலுவலகத்தில் 300 ரூபாய் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.மகா அபிஷேகத்திற்கான பால், தயிர், நெய், பழ வகைகள், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களை அளிக்க விரும்பும் பக்தர்கள், 15ம் தேதி இரவு 8.௦௦ மணிக்குள் வழங்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 0413-2235125 என்ற தொலைபேசி எண்ணில் பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம்.விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், தேவசேனாதிபதி குருக்கள் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE