புதுச்சேரி; முத்தியால்பேட்டை பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறி, பொதுப்பணி துறை மற்றும் ஆளும் காங்., ஆட்சியை கண்டித்து, பா.ஜ., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மணிக்கூண்டு அருகில் நடந்த போராட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார். தொகுதி தலைவர் ஹரிதாஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தண்ணீர் குடங்களை உடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.போராட்டத்தில் மாநில மகளிரணி தலைவி ஜெயலட்சுமி, முன்னாள் நகர மாவட்ட தலைவர் மூர்த்தி, நகர மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், மணிமாறன், நகர மாவட்ட துணை தலைவர் விஜயரங்கம், தொகுதி பொது செயலாளர்கள் அன்பரசன், செந்தில்குமார், துணை தலைவர் கலாவதி, செயலாளர் ராஜலட்சுமி, பொருளாளர் சரஸ்வதி, மாநில செயற்குழு உறுப்பினர் சிவஞானம், கூட்டுறவு பிரிவு இணை அமைப்பாளர் ரஞ்சித், தொகுதி கிளை தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE