புதுச்சேரி; கவுரவ பாலசேவிகா பணிக்கான போட்டித் தேர்வு, அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில், கவுரவ பாலசேவிகா பணிக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. இப்பணியிடத்தை, போட்டி தேர்வு மூலம் நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து பள்ளி கல்வித் துறை இயக்குவர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'கவுரவ பாலசேவிகா பணிக்கான போட்டி தேர்வு, அடுத்த மாதம் 13ம் தேதி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அறிவிப்பாணை 06.08.2019ல் https://schooledn.py.gov.in/recruitment.html என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE