திருவள்ளூர்; மாவட்டத்தில், நடப்பாண்டு சம்பா நெல் பயிருக்கு, பயிர் காப்பீடு செய்வதற்கு, வரும், 15ம் தேதி கடைசி என, வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பாண்டு சம்பா நெல் பயிருக்கு, திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.இயற்கை இடர்பாடுகள் ஏதேனும் நிகழும் முன்பே, விவசாயிகள் அனைவரும் நடப்பாண்டிற்கான சம்பா பருவத்தில், நெல் பயிருக்கு காப்பீடு செய்ய, ஒரு ஏக்கருக்கு, 451 ரூபாய் தொகையினை செலுத்த வேண்டும்.இத்திட்டத்தில், சேர்ந்து பயன் பெறலாம். பயிருக்கு பிரீமியம் செலுத்த, இம்மாதம், 15ம் கடைசி நாள் ஆகும்.காப்பீடு செய்வதற்கு இ - சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் ஏதேனும் ஒன்றில் கிராம நிர்வாக அலுவலரிடம், பயிர் சாகுபடி செய்த அடங்கலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.இதுதவிர, விதைச் சான்று, கணினி சிட்டா, பட்டா, ஆதார் எண் நகல்களுடன் சேமிப்பு கணக்கு துவங்கி பயிர் காப்பீடு செய்துக் கொள்ளலாம். வங்கியில், செலுத்திய கட்டண ரசீதுடன் விண்ணப்பத்துடன் வேளாண் உதவி இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும்.மேலும், விபரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE