பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டம்

Added : நவ 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை; தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தில், நடப்பாண்டில் முழு கொள்ளளவு நீர் தேக்குவதற்கு, பொதுப்பணித் துறை தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.வரும் காலங்களில் ஏற்படும் கூடுதல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தேர்வாய்கண்டிகை மற்றும்
 தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டம்

சென்னை; தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தில், நடப்பாண்டில் முழு கொள்ளளவு நீர் தேக்குவதற்கு, பொதுப்பணித் துறை தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.வரும் காலங்களில் ஏற்படும் கூடுதல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தேர்வாய்கண்டிகை மற்றும் கண்ணன்கோட்டை ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கம் அமைக்க அரசு முடிவு செய்தது.இதற்கு, 330 கோடி ரூபாய் மதிப்பில், 2013ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இந்த நீர்த்தேக்கத்தில், 0.50 டி.எம்.சி., நீர் சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக, சென்னையின், 15 நாள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். நிலம் எடுப்பு வழக்கு, ஒப்பந்த நிறுவனம் குறித்த காலத்தில் பணிகளை செய்யாததால், இத்திட்டம், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிற்கு வரவில்லை.இத்திட்டத்திற்கு, தற்போது, 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.அதற்குள், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, முதல்வர் இ.பி.எஸ்., முடிவெடுத்துள்ளார். எனவே, வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் நீரை, நீர்த்தேக்கத்தில், முழு கொள்ளளவு நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியில், ஐந்து மீட்டர் நீளத்திற்கு, கரை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கான பணிகள், மழையால் இழுபறியாக உள்ளன.ஒப்பந்த நிறுவனம் பணி செய்ய திணறி வருகிறது. இப்பணிகளை முடித்தால், ஏரியில் முழு கொள்ளளவு நீரை சேமிக்க முடியும். தற்போது, நீர்த்தேக்கத்தில், 0.10 டி.எம்.சி., நீர் தேங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-நவ-202007:30:20 IST Report Abuse
Bhaskaran ஒருவேளை தளபதி தான் திறந்து வைத்து கலைஞர் பெயரை சூட்டப்போகிறாரோ என்னவோ என்று ஊடகங்கள் ஹேஷ்யம் போட்டால் உடனே அரசு நடவடிக்கை எடுத்து முடிக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X