திருத்தணி; மாநில நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் சிறுபாலப் பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, கே.ஜி.கண்டிகை பஸ் நிறுத்தம் அருகில், சாலையின் குறுக்கே, 55 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறுபாலம் கட்டும் பணிகள், இருமாதம் முன் துவங்கின.இந்த பாலப் பணிகள், 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஆனால், பாலப் பணிகள் துவங்கி, பல நாட்கள் ஆகியும், இதுவரை முழுமையாக பணிகள் முடிக்கவில்லை.சிறுபாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாலப் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.இந்த மாநில நெடுஞ்சாலை வழியாகத்தான், பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை, சோளிங்கர், சித்துார், வேலுார், திருவண்ணாமலை மற்றும் பெங்களூரு ஆகிய பகுதி களுக்கு, வாகனங்கள் செல்ல வேண்டும்.ஆனால், பாலப் பணிகள் துரித வேகத்தில் நடக்காததால், வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்படுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, சிறுபாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்தி, விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE