பெண்ணிடம் தாலிச்சரடு பறிப்புதிருத்தணி: திருத்தணி அடுத்த, அமிர்தாபுரத்தைச் சேர்ந்தவர் துரைபாபு மனைவி கல்பனா, 32. இவர், மேல்திருத்தணி - பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு ஓட்டல், வியாபாரம் முடித்த கல்பனா, கணவர் துரைபாபுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார்.அப்போது, பஜனை கோவில் அருகே உள்ள வேகத்தடையில், வாகனம் ஏறி இறங்கியபோது, 'ஹெல்மெட்' அணிந்து, இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள், கல்பனா கழுத்தில் அணிந்திருந்த, தாலிச்சரடை பறித்துச் சென்றனர்.தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்த கல்பனா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.ஆர்.டி.சி., பஸ் டிரைவர் மரணம்நகரி: சித்துார் மாவட்டம், நகரி அடுத்த கே.ஜி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 53. ஆர்.டி.சி., பஸ் ஓட்டுனர்.இவர், நேற்று முன்தினம் இரவு, புத்துார் அரசு போக்குவரத்து பணிமனையில் வேலை முடித்து, தன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பினார்.அப்போது, நகரி அடுத்த ராமாபுரம் அருகே, முன்னே சென்ற மாட்டு வண்டியின் மீது, இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிவகுமார் அதே இடத்திலேயே பலியானார்.ரயில் பயணியிடம் திருடியவர் கைதுநகரி: சித்துார் மாவட்டம், ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 'ராயல்சீமா' விரைவு ரயிலில், கடந்த மாதம் பயணித்த ரயில் பயணி ஒருவரின் பொருட்கள் திருடு போயின.இது தொடர்பாக, ரேணிகுண்டா ரயில்வே போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், நெல்லுார் மாவட்டம், களவாய் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், 35, என்பவரை, போலீசார், ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைது செய்தனர். விசாரணையில் சிவகுமார், கடந்த மாதம் ரயில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.20 செம்மரம் பறிமுதல்நகரி: சித்துார் மாவட்டம், பாகரபேட்டை அடுத்த, சேஷாசலம் காட்டுப்பகுதியில், செம்மரங்கள் வெட்டி கடத்துவதாக, அதிரடி படை போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருப்பதி அதிரடிபடை போலீசார், மேற்கண்ட இடத்திற்கு சென்று, திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, அங்கு செம்மரங்கள் வெட்டிய தமிழகம், திருவாண்ணமலை சேர்ந்த, மாத்தையன், 40, முருகன், 34, பெருமாள், 36, என, மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த, 20 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.படகு கவிழ்ந்து மீனவர் பலிசெய்யூர்: செய்யூர் ஒன்றியம், ஆலம்பரைகோட்டை அடுத்த, ஊத்துக்காட்டான் அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன், 51. இவர், தன் மகன் துளசிங்கத்துடன், அப்பகுதி கடலுக்கு, நேற்று மீன் பிடிக்க சென்றார்ற.அப்போது எழுந்த பேரலையில் சிக்கி, படகு சாய்ந்தது. இதில், நிலை தடுமாறி, கோவிந்தன் மற்றும் துளசிங்கம், கடலில் விழுந்தனர்.நீரில் மூழ்கிய கோவிந்தனை, சிரமப்பட்டு தண்ணீரில் இருந்து மீட்ட துளசிங்கம், அவரை கரைக்கு கொண்டு வந்தார். எனினும், மூச்சுத்திணறி, கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். சூணாம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.இரு இடங்களில் சாலை விபத்துமதுராந்தகம்: அரியலுார் மாவட்டம், செந்துறையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 22. இவர், சென்னை -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு, மதுராந்தகம் நோக்கி சென்றார்.அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பன்னீர்செல்வம், அதே இடத்திலேயே உயிரிழந்தார்.தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன், 20, தன் நண்பர் சுதன், 25, என்பவரோடு, இருசக்கர வாகனத்தில், மேற்கண்ட தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை, திண்டிவனம் மார்க்கமாக சென்றார்.அப்போது, பழையனுார் கூட்டுச்சாலை அருகே, நிலை தடுமாறிய வாகனம், சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.படுகாயம் அடைந்த இருவரையும், அப்பகுதியினர் மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாகன உதவியோடு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சண்முகநாதன் உயிர் இழந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE