பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தான் குட்டை தெருவில் மழை நீர் கால்வாய் சீரமைப்பு

Added : நவ 13, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சாத்தான் குட்டை தெருவில், 9.90 லட்சம் ரூபாயில், மழைநீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.காஞ்சிபுரம் நகராட்சி, சாத்தான் குட்டை தெருவில்அமைக்கப்பட்டு உள்ள, மழை நீர் கால்வாய் துார்ந்து, அதன் மேல் மூடி, பல இடங்களில் உடைந்து காணப்பட்டது.இந்நிலையில் கடந்த மாதம், நகராட்சி அதிகாரிகள், இப்பகுதியில் ஆய்வு செய்தபோது, கால்வாயை சீரமைக்க நடவடிக்கை

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சாத்தான் குட்டை தெருவில், 9.90 லட்சம் ரூபாயில், மழைநீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் நகராட்சி, சாத்தான் குட்டை தெருவில்அமைக்கப்பட்டு உள்ள, மழை நீர் கால்வாய் துார்ந்து, அதன் மேல் மூடி, பல இடங்களில் உடைந்து காணப்பட்டது.இந்நிலையில் கடந்த மாதம், நகராட்சி அதிகாரிகள், இப்பகுதியில் ஆய்வு செய்தபோது, கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.இப்பணியின்போது, கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்ற பள்ளம் தோண்டினர். அதை மூடாமல், திறந்தநிலையில் விட்டு சென்றதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், மழை நீர் கால்வாய் உயரத்தை அதிகரித்து, அதன் மேல் மூடி அமைக்க, 9.90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில், கால்வாய் பணி முடிக்கப்படும் என, நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X