செங்கல்பட்டு; செங்கல்பட்டு மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையொட்டி, போக்குவரத்து சீரமைக்கும் பணியில், 965 போலீசார் ஈடுபட்டுள்ளதாக, எஸ்.பி., கண்ணன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கூடுவாஞ்சேரி அடுத்த, கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் மற்றும் செங்கல்பட்டு அடுத்த, பரனுார், அச்சிறுப்பாக்கம் அடுத்த, தொழுப்பேடு சுங்கச்சாவடி வரை, தேசிய நெடுஞ்சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இதேபோல், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை வழியாகவும், ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று துவங்கி, வரும், 13ம் தேதி வரை, செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில், போலீசார் ஈடுபடுவர் என, மாவட்ட எஸ்.பி., கண்ணன் தெரிவித்தார்.இதில், கூடுதல் கண்காணிப்பு அலுவலர், ஏழு துணை காவல் கண்காணிப்பாளர்கள், 20 இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட, 965 போலீசார், சுழற்சி முறையில், 24 மணிநேரம் பணியில் ஈடுபட உள்ளனர்.பொதுமக்கள், அவசர தேவைக்கு, செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண்; 044- - 2954 0888, 2954 0444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE