பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஆர்.எம்., கொரோனா மையத்தில் 97 சதவீதம் பேர் குணமானதாக தகவல்

Added : நவ 13, 2020
Share
Advertisement
செங்கல்பட்டு; ''எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா சிறப்பு மையத்தில் சிகிச்சை முடிந்து, 97 சதவீதம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்,'' என, மருத்துவமனை இணை துணை வேந்தர் ரவிகுமார் தெரிவித்தார்.அவர், நிருபர்களிடம் கூறியாதவது;காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, 1,450

செங்கல்பட்டு; ''எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா சிறப்பு மையத்தில் சிகிச்சை முடிந்து, 97 சதவீதம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்,'' என, மருத்துவமனை இணை துணை வேந்தர் ரவிகுமார் தெரிவித்தார்.அவர், நிருபர்களிடம் கூறியாதவது;காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, 1,450 பேர், நோய் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டனர். இதில், 97 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 37 பேர், சிகிச்சை பலனின்றி இறந்தனர்.நாட்டிலேயே தயாரிக்கப்படும், கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை மையம், தமிழகத்தில், எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.இங்கு, முதற்கட்ட பரிசோதனையில், 30 தன்னார்வலர்களும், இரண்டாம் கட்ட பரிசோதனையில், 45 தன்னார்வலர்களும் பங்கேற்று, தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். இதுவரை, எந்த பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படவில்லை. மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு, அரசு அனுமதித்த பின், 1,500க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்படும்.கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.தொற்று குறையமால் உள்ளதால், மத்திய, மாநில அரசு தெரிவிக்கும் அறிவுரைகளை, பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X