சென்னை; கூவம் ஆற்றின் குறுக்கே, 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை, பொதுப்பணித்துறை துவங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த புதுச்சத்திரம் கிராமத்தில், கூவம் ஆற்றின் குறுக்கே கொரட்டூர் அணைக்கட்டு இருந்தது. இதன் வாயிலாக, மழைக்காலங்களில் கிடைக்கும் நீர், அங்கு சேமிக்கப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவும், இந்த தடுப்பணை உதவியது. ஒதுக்கப்பட்டதுஇதை பயன்படுத்தி, அங்கு, 14 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நடந்து வந்தது. கடந்த, 2015ம் ஆண்டு பெய்த பெருமழையால், தடுப்பணை முற்றிலும் சேதம் அடைந்தது. கூவம் ஆற்றின் கரைகளும் பாதிக்கப்பட்டன. இதனிடையே, 'மூன்று ஆண்டுகளில், 1,000 தடுப்பணைகள் கட்டப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் 2017, ஜூனில் அறிவித்தார். முதற்கட்டமாக, 2017 - 18ம் ஆண்டில், 80 தடுப்பணைகள் கட்ட, 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதில், கொரட்டூர் தடுப்பணைக்கும், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இறுதியாக, தடுப்பணை கட்டும் பணிக்கு, 32.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தீவிரம்தற்போது, இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் பணிகளை, பொதுப்பணித்துறை துவங்கியுள்ளது. அங்கு, 550 அடி நீளம், 15 அடி உயரத்தில், புதிய தடுப்பணை கட்டப்படவுள்ளது. அதில், மழைக்காலங்களில், வெள்ள நீரை வெளியேற்றும் வகையில், 32 மணல் போக்கிகளும் அமையவுள்ளன. கட்டுமான பணிகளை, வடகிழக்கு பருவ மழை முடிந்ததும் துவங்க, பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ஒப்பந்ததாரர் தேர்வு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE