சென்னை; 'ரிலையன்ஸ் டிஜிட்டல்' நிறுவனத்தின், 'எலக்ட்ரானிக்ஸ் பண்டிகை' பல்வேறு சலுகைகளுடன் துவங்கி உள்ளது.நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் சில்லரை விற்பனையாளராக, 'ரிலையன்ஸ் டிஜிட்டல்' உள்ளது. நாடு முழுதும், 800 நகரங்களில், 400க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் மற்றும் 1,800க்கும் மேற்பட்ட, 'மை ஜியோ' கடைகள் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு, ரிலையன்ஸ் கடைகளில், எச்.டி.எப்.சி., வங்கியின் டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் இ.எம்.ஐ., வாயிலாக, 10 சதவீதம் கேஷ்பேக்குடன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.சிட்டி, ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் கோட்டாக் மஹிந்திரா வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் ஈ.எம்.ஐ., ஆகியவற்றில், 4,500 ரூபாய் தள்ளுபடியும், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் கார்டுகளுக்கு, 2,000 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும்.பண்டிகை கால பரிசாக, ரிலையன்ஸ் டிஜிட்டலின், 1,000 ரூபாய் மதிப்பிலான, 'வவுச்சர்கள்' வழங்கப்பட உள்ளன. இச்சலுகை, நவ., 16 வரை மட்டுமே. அனைத்து லேப் - டாப்களும், 10 சதவீதம் தள்ளுபடியிலும், 'டிவி'க்களுக்கு, சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.இதுபோன்ற, பல சலுகைகளுடன், மை ஜியோ ஸ்டோர்கள் வாயிலகாவும், ஆன்லைனில், www.reliancedigital.in இணையதளம் வாயிலாகவும், வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கலாம் என, நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE