பொது செய்தி

தமிழ்நாடு

அடையாறு மண்டலத்தில் மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை

Added : நவ 13, 2020
Share
Advertisement
அடையாறு; மழையால் அதிகம் பாதிக்கப்படும் வேளச்சேரி, கோட்டூர்புரம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில், மழை நீர் தேங்குவதை தடுக்க, 70 இடங்களில் மோட்டார் அமைக்கப்பட உள்ளது.அடையாறு மண்டலத்தில், அடையாறு ஆறு, பக்கிங்ஹாம், வீராங்கால் மற்றும் வேளச்சேரி - தரமணி கால்வாய் உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள, வடிகாலில் செல்லும் மழை நீர், கால்வாய் மற்றும் அடையாறு ஆறு வழியாக, கடல்

அடையாறு; மழையால் அதிகம் பாதிக்கப்படும் வேளச்சேரி, கோட்டூர்புரம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில், மழை நீர் தேங்குவதை தடுக்க, 70 இடங்களில் மோட்டார் அமைக்கப்பட உள்ளது.அடையாறு மண்டலத்தில், அடையாறு ஆறு, பக்கிங்ஹாம், வீராங்கால் மற்றும் வேளச்சேரி - தரமணி கால்வாய் உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள, வடிகாலில் செல்லும் மழை நீர், கால்வாய் மற்றும் அடையாறு ஆறு வழியாக, கடல் மற்றும் சதுப்பு நிலத்தை அடைகின்றன.மண்டலத்தில், வேளச்சேரி, கோட்டூர்புரம் மற்றும் திருவான்மியூர் பகுதிகள் மழை நீரால் பாதிக்கப்படும். குறிப்பாக, வேளச்சேரி பகுதியில், அதிகமான பாதிப்பு இருக்கும். மொத்தம், 70 இடங்களில் மழை நீர் தேங்கும் என, அடையாளம் காணப்பட்டுள்ளது.இதை தடுக்க, மண்டலத்தில், 70 இடங்களில் மோட்டார் வைத்து, மழைநீரை எளிதாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது, 20 இடங்களில், ஐந்து முதல் 50 குதிரை திறன் கொண்ட மோட்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன.வடிகால் மற்றும் சாலையில் அதிகமாக தேங்கும் மழை நீர், மோட்டாரில் பொருத்தப்பட்ட குழாய் வழியாக, எளிதாக வெளியேற்றப்படுகிறது. மழையின் வேகத்தை பொறுத்து, இதர இடத்தில் மோட்டார் அமைக்கப்பட உள்ளது.இதன் மூலம், சாலை மற்றும் குடியிருப்புகளில் மழை நீர் தேங்குவது தடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X