சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் தற்கொலைக்கு முயன்ற பெண்

Added : நவ 13, 2020
Share
Advertisement
சாஸ்திரிநகர்; பெசன்ட் நகர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, ரோந்து காவலர் லோகேஷ், விரைந்து சென்று காப்பாற்றினார். இவருக்கு, பெண்ணின் கணவர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது, காவல் நிலையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை, மடிப்பாக்கம், அபிராமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 58. இவரது மனைவி ராஜி, 55. இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜி, மனநலம்

சாஸ்திரிநகர்; பெசன்ட் நகர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, ரோந்து காவலர் லோகேஷ், விரைந்து சென்று காப்பாற்றினார்.

இவருக்கு, பெண்ணின் கணவர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது, காவல் நிலையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை, மடிப்பாக்கம், அபிராமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 58. இவரது மனைவி ராஜி, 55. இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜி, மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இதனால், விமானப்படையில் பணிபுரிந்த ராதாகிருஷ்ணன், சில ஆண்டுகளுக்கு முன், விருப்ப ஓய்வு பெற்று, மனைவியை கவனித்து வருகிறார்.நேற்று முன்தினம், ராஜி வீட்டில் இருந்து, ஆட்டோவில் பெசன்ட் நகர் புறப்பட்டார். ஆட்டோவில், 'நான் சாக போகிறேன்; எனக்கு வாழ பிடிக்கவில்லை' என, தனக்கு தானே புலம்பியபடி சென்றுள்ளார்.பெசன்ட்நகர் கடற்கரை சென்றதும், ஆட்டோவில் இருந்து இறங்கிய ராஜி, கடலை நோக்கி, மணலில் நடந்தார். இதை கவனித்த ஆட்டோ ஓட்டுனர், ராஜி தற்கொலை செய்யத் தான் செல்கிறார் என உணர்ந்து, அவ்வழியாக வந்த ரோந்து காவலர் லோகேஷ், 26, என்பவரிடம், நடந்த சம்பவத்தை கூறிவிட்டு புறப்பட்டார்.உடனே, கடலை நோக்கி ஓடிய லோகேஷ், ராஜியை தேடினார். கடல் நீரில் கால் நனைய வணங்கியபடி நின்ற ராஜி, தற்கொலை செய்ய, சீறிய அலையை நோக்கி கடலுக்குள் நடந்தார். சற்று துாரத்தில் வந்த லோகேஷ், விரைந்து சென்று ராஜியை, காப்பாற்றி கரை சேர்த்தார்.பின், மகளிர் போலீசாரை வரவழைத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அதோடு, கணவர் ராதாகிருஷ்ணனை வரவழைத்து, தகுந்த ஆலோசனை வழங்கினர்.துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய லோகேஷை பார்த்து, ராதாகிருஷ்ணன், கண்ணீர் மல்க நன்றி கூறினார். பின், மனைவியை அழைத்துச் சென்றார்.இச்சம்பவம், போலீசார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X