மழையால் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

Added : நவ 13, 2020
Share
Advertisement
அம்பத்துார்; அதிகாலை முதல் நீடித்த மழையால், பிரதான சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை சுற்றுவட்டாரங்களில், நேற்று அதிகாலை முதல் பெய்த பலத்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.இதனால், சேதமடைந்த சாலைகளில், வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அம்பத்துார்

அம்பத்துார்; அதிகாலை முதல் நீடித்த மழையால், பிரதான சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை சுற்றுவட்டாரங்களில், நேற்று அதிகாலை முதல் பெய்த பலத்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.இதனால், சேதமடைந்த சாலைகளில், வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அம்பத்துார் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை, பாடி மேம்பாலம், பூந்த மல்லி நெடுஞ்சாலை, மாதவரம் ரவுண்டானா, 200 அடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், போக்குவரத்து நெரிசல் நீடித்தது.குறிப்பாக, தீபாவளியை கொண்டாட, புறநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருந்து, வெளிமாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்வோர், கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்றனர்.அவர்கள் தவிர, அன்றாட அலுவல் மற்றும் தீபாவளி விற்பனைக்காக, காய்கறி,பூ, பழங்கள் வாங்குவோரும், கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையின் மற்ற பகுதிகளுக்கு சென்று, வருவது வழக்கம்.மேலும், புத்தாடை, பட்டாசு, இனிப்பு வாங்க, சென்னைக்கு வருவோரும் அதிகரித்துள்ளனர். இதனால், அம்பத்துார், மாதவரம், வில்லிவாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதி களில் இருந்து, பாடி மேம்பாலத்தில் இணையும், அனைத்து சாலைகளிலும், நேற்று காலை, வாகன போக்குவரத்து அதிகரித்தது.அந்த மேம்பாலத்தின் மீது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மெல்ல கடந்து சென்றன.வாகன ஓட்டிகளும், பயணியரும், குறித்த நேரத்தில், செல்ல முடியாமல் தவித்தனர். அந்தந்த பகுதி போலீசார், போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X