மழை நீர் வடிய வழியில்லை கொரட்டூர் மக்கள் அவதி

Added : நவ 13, 2020
Share
Advertisement
கொரட்டூர்; மழை நீர் வடிந்து செல்ல போதிய கால்வாய் வசதி இன்றி, குடியிருப்பு பகுதி களில் தேங்கிய மழை நீரால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.அம்பத்துார் அடுத்த, கொரட்டூரில் உள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டி.வி.எஸ்.நகர் விரிவாக்கம், பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, பாலாஜி நகர், கருக்கு டி.டி.பி., காலனி ஆகிய பகுதிகளில், மழைநீர் வடிந்து செல்ல போதிய கால்வாய் வசதி இல்லை.இதனால்,

கொரட்டூர்; மழை நீர் வடிந்து செல்ல போதிய கால்வாய் வசதி இன்றி, குடியிருப்பு பகுதி களில் தேங்கிய மழை நீரால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.அம்பத்துார் அடுத்த, கொரட்டூரில் உள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டி.வி.எஸ்.நகர் விரிவாக்கம், பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, பாலாஜி நகர், கருக்கு டி.டி.பி., காலனி ஆகிய பகுதிகளில், மழைநீர் வடிந்து செல்ல போதிய கால்வாய் வசதி இல்லை.இதனால், ஒரு மணி நேரம் மழை பெய்தாலும், அங்குள்ள சாலை மற்றும் தெருக்களில், 1 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி விடுகிறது.அங்கு வசிப்போர், மழை நீரை அகற்ற, மாநக ராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தாலும், ஆக்க பூர்வமான நடவடிக்கை இல்லை. அதே நேரத்தில், பொதுமக்களை சமாளிக்க, சிறிய மோட்டார் மூலம், தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படுகிறது.ஆனால், வெளியேற்றப்படும் மழை நீர், ஒரு பகுதி யில் இருந்து மற்றொரு பகுதிக்கு பாய்ந்து தேங்கி விடுகிறது. இதனால், அங்குள்ளவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால், கொசு உற்பத்தியுடன், சுகாதாரசீர்கேடும் ஏற்படுகிறது.கொரட்டூரில், மழை நீரை வெளியேற்றவோ, சேகரிக்கவோ, மாநகராட்சி உரிய கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை. பெயரளவில் உள்ள மழை நீர் வடிகால்கள் அனைத்தும், கழிவு நீர் கால்வாயாக மாறி, கேடு விளைவிக்கின்றன. குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கும் மழை நீரை அகற்றவும், ஆக்கபூர்மான நடவடிக்கை இல்லை. இங்கு, ஒரு மணி நேர மழைக்கே, நிலைமை மோசமாகி விடுகிறது. மழை நீரை அகற்றும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால், நாங்கள் அவதிப்படுகிறோம்.பொதுமக்கள், கொரட்டூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X