சென்னை; சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, தீபாவளியை முன்னிட்டு, விரைவில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிறப்பு குழந்தைகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தசை சிதைவால் பாதிக்கப்பட்டோர், 75 சதவீதத்திற்கு மேல் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு, மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம், 1,500 ரூபாய் மாத உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு மாதமும், 10ம் தேதிக்கு சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டு வந்தது. அத்தொகை வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளுக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.கடந்த சில மாதங்களாகவே, உதவித் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மாத கடைசியில், ஏழை, எளிய மாற்று திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மிகவும் தவித்து வருகின்றனர்.இம்மாதம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விரைவில் உதவித் தொகை வழங்க, மாற்று திறனாளிகள் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE