சென்னை: சென்னையில், குற்றத்தடுப்பு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை கண்காணிக்க, பறக்கும் கேமரா எனப்படும், 'ட்ரோன்'களை, தனியார் நிறுவனம், போலீசாருக்கு வழங்கிஉள்ளது.அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், சான்டியாகோ என்ற இடத்தில், குவால்கம் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இதன் கிளை அலுவலகம், சென்னை, பெருங்குடியில் உள்ளது. இந்நிறுவனம் சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் செலவில், பிரான்ஸ் நாட்டில் இருந்து, மூன்று ட்ரோன்களை இறக்குமதி செய்துள்ளது.இந்த ட்ரோன்கள், 26 நிமிடங்களில், 4 கி.மீ., துாரத்திற்கு பறக்கும் திறன் உடையது. இதில், 40 டிகிரி வரை, மனித உடல் வெப்பத்தை அளவிடும் கருவி உள்ளது.இந்த ட்ரோன்களை, குவால்கம் நிறுவன அதிகாரிகள், சென்னை, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் நேற்று ஒப்படைத்தனர். ட்ரோன்கள், சென்னையில், குற்றத்தடுப்பு, கொரோனா தடுப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளை கண்காணிக்க பயன்படுத்த இருப்பதாக, போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE