எல்லை பகுதியில் வளர்ச்சி திட்டங்கள்: அமித் ஷா

Updated : நவ 13, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
தோர்டோ : “முந்தைய, 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, எல்லைப் பகுதி மேம்பாட்டிற்காக, பிரதமர் மோடியின் அரசு, பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், மத்திய அரசின் எல்லை பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த நிகழ்ச்சி யில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.அப்போது, அவர்
BJP, Amit Shah, Home Minister, அமித் ஷா

தோர்டோ : “முந்தைய, 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, எல்லைப் பகுதி மேம்பாட்டிற்காக, பிரதமர் மோடியின் அரசு, பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், மத்திய அரசின் எல்லை பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த நிகழ்ச்சி யில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.

அப்போது, அவர் பேசியதாவது: எல்லையோர பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. எல்லைப் பகுதி கிராமங்களில், கல்வி, மருத்துவம், தொலை தொடர்பு போன்றவற்றை மேம்படுத்தும் பல வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.


latest tamil newsநாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல், எல்லைப் பகுதி கிராமங்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், அவரது மரணத்திற்குப் பின், காங்., தலைமையிலான மத்திய அரசு, அவற்றை நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடியின் அரசு, படேல் கூறியதை நிறைவேற்றி வருகிறது. கடந்த, 2008 - 2014 காலத்தில், எல்லைப் பகுதி யில் அமைந்துள்ள, 170 கி.மீ., நீள சாலைகள் மட்டுமே புணரமைக்கப்பட்டன. ஆனால், 2014 - 2020 காலத்தில், 480 கி.மீ., நீள சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதி மேம்பாட்டிற்காக, 2020 - 2021 நிதியாண்டிற்கு, 11 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கு முந்தைய, 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மோடி அரசின்கீழ், பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய காலங்களில் இருந்ததுபோல் அல்லாமல், நம் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும், நம் எதிரிகளுக்கு, சரியான பதிலடியை இந்தியா தற்போது கொடுத்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
13-நவ-202018:34:21 IST Report Abuse
mathimandhiri அட சும்மா இருங்க அமீத்துஜி. நாங்க எல்லைப்புற மாநிலங்களை வைத்திருந்ததே எங்க சப்பை மூக்கன் கொஞ்சம் கொஞ்சமாக கொறித்துத் தின்பதற்குத் தானே? உங்களுக்குத் தெரியுமா அவன் எங்க ரெஜிம்ல எத்தனை கடிச்சு முழுங்கியிருக்கான்னு? எங்க கட்சிக்கு காசு குடுக்கறவன் அவன். நாங்க எம்.ஓ.யு. எல்லாம் கூட போட்டிருக்கோம் பாதுகாப்பு வீரர்கள் அது இதுன்னு சொல்லாதீங்க. நாங்க அவங்களை இதுக்குத் தான் தாரை வாத்து வெச்சிருந்தோம். ஆமா.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-நவ-202017:02:02 IST Report Abuse
r.sundaram எல்லைகள் பாதுகாப்பாக இருந்தால்தான் நாமும் பாதுகாப்பாக இருக்க முடியும். இதை காங்கிரஸ் கடைசி வரை உணர வில்லை. நேரு முப்பத்தி ஆறாயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்தை சைனாவிடம் இழந்தார் என்றால், மன்மோகன் ஆட்சியில் அறுநூற்றி நாற்பது சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனாவிடம் இழந்தோம். ஆனால் தற்போதைய ஆட்சியில் அது நடக்க வில்லை. என்பதை மக்கள் உணரவேண்டும். சீனாவிடம் இழந்த நிலங்களை மீட்க வேண்டும் என்பதை மோடி அரசாங்கம் கடமையாக கருத வேண்டும். அதற்க்கான முயற்ச்சிகளில் இறங்க வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-நவ-202013:17:16 IST Report Abuse
Ramesh Sargam நாட்டில் வளர்ச்சி அடையாத ஒரே "பகுதி" காங்கிரஸ் ஆட்சி செய்யும் "தொகுதி" (தொகுதிகள்)
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
13-நவ-202014:55:34 IST Report Abuse
கொக்கி குமாரு உண்மைதானுங்க, காங்கிரஸ் ஆட்சி செய்யும் தொகுதிகளில் அங்கு வரும் நலத்திட்ட பணத்தை அந்த தொகுதியின் காங்கிரஸ் ஆளுங்களே ஆட்டையை போட்டுவிடுகிறார்கள் போலும். MP, MLA வை தாண்டி பணம் மக்களுக்கு சென்று சேராதுங்களே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X