வாஷிங்டன்: காங்., முன்னாள் தலைவர் ராகுல் ஒரு பதட்டமான, பரபரப்பான மேலும் அவரை புரிந்து கொள்ள முடியாத குணம் கொண்டவராக இருந்தார் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தில் கூறியுள்ளார்.

"ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்" ( The Promised Land ) என்ற புத்தகத்தை ஒபாமா எழுதியுள்ளார். இந்த புத்தகம் தொடர்பான விவரத்தை அமெரிக்க முன்னணி பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் இதழில் இது தொடர்பான ஒரு கட்டுரையில் ராகுல், மன்மோகன்சிங், ரஷ்ய அதிபர் புடின், தற்போதைய அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் ஆகியோர் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புத்தகத்தில் அவர் ; " ராகுல் ஒரு பதட்டமான, அறியப்பட முடியாத தரம் கொண்டவராக உள்ளார். மேலும் அதிக பாடங்களை படித்து ஆசிரியரை கவரும் விதமாக ஒரு மாணவராக இருந்தார்" . ஆனாலும் எந்த விஷயத்திலும் அவர் ஆழமாக தெரிந்து கொள்ள முயற்சிகள் எடுப்பதில்லை. அரசியல் தெளிவற்றவராக இருந்தார்.
அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் பாப் கேட்ஸ், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் ஒரு வகையான நெருக்கமற்ற ஒருமைப்பாட்டைக் கொண்டவராக இருந்தனர். இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE