பொது செய்தி

இந்தியா

முருகனின் வாரிசுன்னு சொல்லக் கூடிய சிலருக்கு இப்படி, மறை கழண்டுடுச்சே...

Updated : நவ 13, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
படத்தில், ரஜினிக்கு, 'டூப்' போட்டு நடிப்பவர், ரஜினி ஆகி விடுவாரா... அதுபோலத் தான், தமிழகத்தில், முருகனால் எழுச்சி ஏற்பட்டால், அது, எங்களுக்குத் தான் லாபமாக இருக்குமே தவிர, பா.ஜ.,வுக்கு எந்தச் சூழ்நிலையிலும் லாபம் தராது.- நாம் தமிழர் கட்சி சீமான்'அப்போ, கந்தர் சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த புராணம், கந்தர் அலங்காரம் போன்றவற்றை பாடிய, போற்றிய பெரியவர்களும், காலம்
சீமான், வைகை செல்வன்

படத்தில், ரஜினிக்கு, 'டூப்' போட்டு நடிப்பவர், ரஜினி ஆகி விடுவாரா... அதுபோலத் தான், தமிழகத்தில், முருகனால் எழுச்சி ஏற்பட்டால், அது, எங்களுக்குத் தான் லாபமாக இருக்குமே தவிர, பா.ஜ.,வுக்கு எந்தச் சூழ்நிலையிலும் லாபம் தராது.
- நாம் தமிழர் கட்சி சீமான்


'அப்போ, கந்தர் சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த புராணம், கந்தர் அலங்காரம் போன்றவற்றை பாடிய, போற்றிய பெரியவர்களும், காலம் காலமாக, 'முருகா...' என, விபூதியை நெற்றியில் பூசி வாழ்பவர்களையும் என்ன சொல்வது... முருகனின் வாரிசுன்னு சொல்லக் கூடிய சிலருக்கு இப்படி, மறை கழண்டுடுச்சே...' என முருகனை வேண்டிக் கொள்ளத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.



அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலாவை ஏற்றுக் கொண்ட கட்சியினர், முதல்வராக அவரை ஏற்கத் தயாராக இல்லை. அவர் இல்லாமல், கட்சி மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதனால், அவர் சிறையிலிருந்து வந்தாலும், கட்சியில் பெரிய தாக்கம் இருக்காது.
- அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன்


'சிறையிலிருந்து அவர் முன்கூட்டியே வருவாரா, மாட்டாரா என்பதே இன்னும் உறுதியாகாத நிலையில், இதுபோன்ற யூகங்கள் தேவைதானா...' என, எரிச்சலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டி.



மின்சார வாரிய தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து, மின்வாரிய தலைமை அதிகாரியுடன், தீபாவளி பண்டிகை முடிவடைந்து முத்தரப்பு பேச்சு நடத்தப்படும். அதன் மூலம் அவர்கள் கோரிக்கைகள் குறித்து சுமுக தீர்வு ஏற்படுத்தப்படும்.
- அமைச்சர் தங்கமணி


latest tamil news





'தீபாவளி முடிந்து பேசினால், ஆறிய கஞ்சி, பழங்கஞ்சி ஆகிவிடும் என்கின்றனரே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், மின் துறை அமைச்சர் தங்கமணி பேட்டி.



மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு, விவசாயிகள் மனமுவந்து நிலங்களை வழங்கியுள்ளனர். ஆனால், திருப்பூரில் உயர் மின்கோபுரம் அமைக்க, நிலம் தராமல் விவசாயிகள் சுயநலத்தோடு நடந்து கொண்டுள்ளனர் என, முதல்வர் இ.பி.எஸ்., பேசியுள்ளார். அவரது பேச்சை கண்டிக்கிறோம்.
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலர் சண்முகம்


'உண்மையைத் தானே, முதல்வர் பேசியுள்ளார். இதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கிறீர்கள்...' என, மடக்கத் தோன்றும் வகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலர் சண்முகம் அறிக்கை.



தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ள, இணையவழி உறுப்பினர் சேர்க்கையில், இதுவரை, 20 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், 35 வயதுக்கு உட்பட்டோர். இதன் மூலம் இளைஞர்கள், ஸ்டாலின் பின் தான் உள்ளனர் என்பது தெரிய வருகிறது.
- தி.மு.க., துணை பொதுச் செயலர் பொன்முடி


'எல்லா இளைஞர்களும், உங்கள் கட்சியில் வந்து சேர்ந்து விட்டனர்; அப்போ, பிற கட்சிகளில் உள்ள இளைஞரணி அமைப்பை கலைச்சுடலாமா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., துணை பொதுச் செயலர் பொன்முடி பேச்சு.


Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANTONYRAJ - MADURAI,இந்தியா
14-நவ-202004:12:05 IST Report Abuse
ANTONYRAJ சீமானை தற்போது அவரது தம்பிகளே நம்புவதில்லை.அதுவும் போக இவர் மேடைகளில் அள்ளி விடும் பொய்களை பார்த்து குறிப்பாக ஈழ தமிழர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-நவ-202020:01:11 IST Report Abuse
sankaseshan போகிற போக்கை பார்த்தல் சைமன் அண்ணாச்சி யேசு கையில் சிலுவையை எடுத்துவிட்டு வேலை கொடுத்து விடுவார் .
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
13-நவ-202018:37:34 IST Report Abuse
S. Narayanan வேஷம் போடுபவர்களில் பல ரகம் உண்டு. இவர் எந்த ரகம் பெரும் பண ரகம் போல. அப்படி என்றால் பணத்துக்காக எதையும் செய்யும் ரகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X