பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,16 முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா: தமிழக அரசு அனுமதி

Updated : நவ 13, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: வரும் 16 ம் தேதி முதல் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் கோயில்களில் குட முழுக்கு விழா நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி
குடமுழுக்கு, தமிழகஅரசு, கோவில், கோயில், அனுமதி, வழிபாட்டுதலங்கள்,

சென்னை: வரும் 16 ம் தேதி முதல் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் கோயில்களில் குட முழுக்கு விழா நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, பல்வேறு வழிபாட்டு தலங்களில் பணிகள் முடிந்தும், பல மாதங்கள் குடமுழுக்கு செய்ய முடியாமல் தடைபட்டுள்ளது. குடமுழுக்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என பல கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.


latest tamil news



இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் வரும் 16ம் முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதிக்கப்படுகின்றது. கொரோனா தொற்று ஏற்படா வண்ணம், மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடித்து இவ்விழாக்களை நடத்த வேண்டாம். பொது மக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டு கொள்கிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
13-நவ-202018:26:27 IST Report Abuse
S. Narayanan நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X