மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் கடைசிநாளில் சரிவுடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 251.44 புள்ளிகள் சரிந்து 43,105.75ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 68.95 புள்ளிகள் சரிந்து 12,621.85ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் சரிவாலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தோடு பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருவதாலும், முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து காலை 10.15மணியளவில் சென்செக்ஸ் 58, நிப்டி 18 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகின. இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை சார்ந்த பங்குகள் சரிவை சந்தித்தன. அதேசமயம் ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா போன்ற நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.74.63ஆக வர்த்தகமானது.
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 1.59 சதவீதம் சரிந்து 42.84 அமெரிக்க டாலராக விற்பனையாகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE