ஈரோடு: தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவை சேர்ந்த, 45 பேர் ரயில்வே பாதுகாப்பு பணிக்கு ஈரோடு வந்துள்ளனர். தீபாவளி காலம் என்பதால், ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்ட நெரிசல் காணப்படும். இதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த, 45 பேர் ரயில்வே போலீசாருடன் இணைந்து பணியாற்ற, அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஈரோடு, கோவையில் தலா, 15, திருப்பூரில், 10, போத்தனூரில் ஐந்து என, தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவை சேர்ந்த போலீசார், 45 பேர் ஏழு நாட்கள் பணியில் இருப்பர். நேற்று முதல் இவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன்களில் கண்காணிப்பு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE