பொது செய்தி

தமிழ்நாடு

விதி மீறும் பட்டாசு கடைகள்: ஈரோடு கலெக்டர் எச்சரிக்கை

Added : நவ 13, 2020
Share
Advertisement
ஈரோடு: அனுமதி வழங்கப்பட்ட இடத்துக்கு மாற்றாக, வேறு இடங்களில் பட்டாசு கடை நடத்துவது, பட்டாசை சேமித்து வைத்திருப்பது தவறானது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து கொள்ள விண்ணப்பம் செய்தவர்களுக்கு, போலீஸ், வருவாய் துறை, தீயணைப்பு துறையினர் விசாரித்து, 90 நபர்களுக்கு

ஈரோடு: அனுமதி வழங்கப்பட்ட இடத்துக்கு மாற்றாக, வேறு இடங்களில் பட்டாசு கடை நடத்துவது, பட்டாசை சேமித்து வைத்திருப்பது தவறானது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து கொள்ள விண்ணப்பம் செய்தவர்களுக்கு, போலீஸ், வருவாய் துறை, தீயணைப்பு துறையினர் விசாரித்து, 90 நபர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளனர். ஏற்கனவே, நிரந்தர அனுமதி பெற்ற, 150 பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளிக்காக அனுமதி பெற்றுள்ளவர்கள், அவர்கள் அனுமதி பெற்ற இடங்களில், உரிய விதிமுறைகளின் கீழ், கடைகளை செயல்படுத்த வேண்டும். அதை தவிர்த்து, உரிமம் இடம் தவிர, வேறு இடங்களில் கடை நடத்துவது, பட்டாசுகளை சேமித்து வைத்திருப்பது குற்றமாகும். மேலும், பஸ், ரயில் போன்றவைகளில் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. இச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. இத்தகவலை கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X