பொது செய்தி

தமிழ்நாடு

கார்த்திகை மாத சோமவார வழிபாட்டுக்கு தடை

Added : நவ 13, 2020
Share
Advertisement
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில், தமிழக, கர்நாடக எல்லையில் பிரசித்தி பெற்ற, கொங்கள்ளி மல்லிகார்ஜுன சுவாமி கோவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு, தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரு, குண்டல்பேட்டை, சாம்ராஜ் நகர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், பக்தர்கள்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில், தமிழக, கர்நாடக எல்லையில் பிரசித்தி பெற்ற, கொங்கள்ளி மல்லிகார்ஜுன சுவாமி கோவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு, தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரு, குண்டல்பேட்டை, சாம்ராஜ் நகர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை மாத சோம வார வழிபாடு, கோவிலில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, நடப்பாண்டு கார்த்திகை சோமவார வழிபாட்டிற்கு, பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நவ., 14 முதல், 2021 ஜன., 12 வரை, பக்தர்கள் மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளின்படி, கோவிலில் நடைபெறும் பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோவில் வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X