ஈரோடு: ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த நால்வர் விபத்தில் பலியான நிலையில், அவர்களது குடும்பத்தாரை சந்தித்து, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் ஆறுதல் கூறினார். பர்கூர் மலைப்பகுதி, தம்புரெட்டியில் இருந்து, அந்தியூர் வட்டக்காட்டுக்கு விவசாய கூலி வேலைக்காக, டாடா சுமோ காரில், 15 பேர் வரை சென்றனர். மணியாச்சிபள்ளம் என்ற இடம் அருகே, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஜோகன், தொட்டப்பி, சிக்கன், தேவராஜ் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். 11 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள், அந்தியூர், ஈரோடு மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின், மலைப்பகுதியில் உள்ள, இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறிய எம்.பி., சுப்பராயன், 'இறந்தவர்கள் குடும்பத்துக்கு, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தார். தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க தலைவர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE