பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு அருகே திண்டலில் சூரசம்ஹார விழா ரத்து

Added : நவ 13, 2020
Share
Advertisement
ஈரோடு: முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான, திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் சூரசம்ஹார விழா பிரசித்தி பெற்றது. அதை பின்பற்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும், கந்தஷஷ்டி சூரசம்ஹார விழா நடப்பது வழக்கம். ஈரோட்டில் புகழ் பெற்ற திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் இடைவிடாமல் நடந்து வந்த சூரசம்ஹார விழா, இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது

ஈரோடு: முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான, திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் சூரசம்ஹார விழா பிரசித்தி பெற்றது. அதை பின்பற்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும், கந்தஷஷ்டி சூரசம்ஹார விழா நடப்பது வழக்கம். ஈரோட்டில் புகழ் பெற்ற திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் இடைவிடாமல் நடந்து வந்த சூரசம்ஹார விழா, இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, கோவில் பணியாளர்கள் கூறியதாவது: கந்தசஷ்டி சூரசம்ஹாரவிழா வரும், 15ல் தொடங்கி, 20ல் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி, 21ல் திருக்கல்யாணம் வைபவத்துடன் விழா நிறைவு பெறும். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபடுவர். நடப்பாண்டு விழா, கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கமான அபி?ஷகம், அலங்கார பூஜைகள் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X