சத்தியமங்கலம்: ஆம்புலன்ஸ் வாகனத்தில், கர்ப்பிணி பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்தது. சத்தியமங்கலம் அடுத்துள்ள, புதுக்கொத்து காடு காலனியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமசாமி, 32. இவர் மனைவி நித்யா, 29. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், உக்கரத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு வந்து தங்கினார். இந்நிலையில் நேற்று மாலை, 5:00 மணிக்கு அவர் பிரசவ வலியால் துடித்தார். உறவினர்கள் தகவலையடுத்து வந்த, 108 அவசரகால ஆம்புலன்சில் கர்ப்பிணி அனுப்பப்பட்டார். ஜல்லியூர் அருகே சென்ற போது, பிரசவம் ஆகத் துவங்கியது. இதையறிந்த, ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் பாரதி, நித்யாவிற்கு உதவி செய்தார். சில நிமிடங்களில், அவர் சுக பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தார். தாயும், சேயும் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அனுமதிக்கப்பட்டு நன்றாக உள்ளனர். மருத்துவ உதவியாளர் பாரதி, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கார்த்தியை பொதுமக்கள் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE