பொது செய்தி

தமிழ்நாடு

சத்தியில் இருந்து மைசூருக்கு பஸ் போக்குவரத்து தொடக்கம்

Added : நவ 13, 2020
Share
Advertisement
சத்தியமங்கலம்: கொ?ரானா அச்சுறுத்தல் காரணமாக, எட்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட, தமிழகம்-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான, அரசு பஸ் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. தமிழகம், கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக, சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மைசூரு, பெங்களூரு, ஹாசன் போன்ற இடங்களுக்கு

சத்தியமங்கலம்: கொ?ரானா அச்சுறுத்தல் காரணமாக, எட்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட, தமிழகம்-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான, அரசு பஸ் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. தமிழகம், கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக, சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மைசூரு, பெங்களூரு, ஹாசன் போன்ற இடங்களுக்கு செல்ல, சத்தியமங்கலத்தில் இருந்து தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கொரானா காரணமாக மார்ச், 23 முதல் எட்டு மாதங்களாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரு மாநிலத்தில் வசிப்போர், சொந்த ஊருக்கு செல்வதற்கு தற்காலிகமாக அரசு பஸ்கள் இயக்கலாம் என, அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை, சத்தி பஸ் ஸ்டாண்டிலிருந்து, மைசூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. பயணிகள் முக கவசம் அணிந்து ஆர்வத்துடன் பயணித்தனர். நீண்ட இடைவெளிக்கு பின், மைசூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பயணிகள் வருகைக்கு ஏற்ப, அரசு பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக, அதிகரிக்கப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X