ஈரோடு: ஈரோடு, கந்தப்பா வீதியில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பில், மாவட்ட தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. துணை தலைமை ஆய்வாளராக வேல்முருகன் பணிபுரிகிறார். இதே அலுவலகத்தில், தொழிற்சாலைகள் துணை இயக்குனர் சந்திரமோகன், இணை இயக்குனர் அமர்நாத் ஆகியோரின் அலுவலகங்களும் உள்ளன. துணை தலைமை ஆய்வாளர் மற்றும் அவருக்கு கீழ் இருக்கும் அதிகாரிகள் தீபாவளி நன்கொடை அதிகளவில் கேட்டு வருவதாக, தொழிற்சாலை உரிமையாளர்கள் சிலர், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட போலீசார், தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று இரவு சோதனை நடத்தினர். ஆய்வாளர் வேல்முருகன், துணை இயக்குனர் சந்திரமோகனிடம் விசாரணை நடத்தி, அலுவலகத்தில் இருந்த, 8.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் காரில் போலீசார் சோதனை நடத்தி, தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்ட நன்கொடை குறித்த விபரம் அடங்கிய டைரி, பரிசு பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE