ஈரோடு: ஈரோடு, கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் கடந்த, 9ல், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதந்து வந்தது. கருங்கல்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில், ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் பிரகாஷ், 30. பி.பெ. அக்ரஹாரம் வய்லா டெக்ஸ் கார்மெண்ட்ஸ் டெய்லர். திருமணம் ஆகவில்லை. தாயுடன் வசித்து வந்தார். மதுவுக்கு அடிமையானவர், கடந்த, 9ல் காலை சம்பளம் வாங்கி கொண்டு சென்றார். மது போதையில் வாய்க்காலில் இறங்கியதும், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின், வாலிபர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE