சேலம்: மக்களுக்கு, வாக்காளர் பட்டியல், தேர்தல் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், நடைபெற உள்ள, தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இணையவழி போட்டிகள், www.elections.tn.gov.in என்ற தளத்தில் நடக்கிறது. இதில், விழிப்புணர்வு சுவரொட்டி வரைதல், கவிதை, பாடல் எழுதுதல், வாசகம் எழுதுதல் போன்ற பிரிவுகளில், மக்கள் பங்கேற்கலாம். தேர்தல், 100 சதவீத வாக்காளர் பட்டியல் பெயர் பதிவு, ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இணையதளம் மூலம் மட்டும், இப்போட்டி நடத்தப்படும். நவ., 18, மாலை, 5:00 மணி வரை, போட்டிகளில் பங்கேற்கலாம். முதல் பரிசு, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு, 7,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 5,000 ரூபாய் வழங்கப்படும். விபரங்களுக்கு, தேர்தல் கமிஷன் இணையதளத்தை காணலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE